fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதில் வியத்தகு முன்னேற்றம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதில் வியத்தகு முன்னேற்றம் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

தமிழ்நாடு முதலமைச் சர் அரியலூர் மாவட்டம் வாரணவாசி குழந்தைகள் மையத்திலிருந்து ஊட் டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், நந்தட்டி அங் கன்வாடி மையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் கூறியுள் ளதாவது:
தமிழ்நாடு முதலமைச் சர் ஊட்டச்சத்தை உறுதி செய் என்னும் திட்டத்தின் செயல்பாடுகளை 21.05.2022 அன்று நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அரசின் முதற்கட்ட தீவிர முன்னெடுத்தல் காரணமாக 0 முதல் 6 வயதுடைய குழந்தைகளின் ஊட்டச் சத்து மற்றும் ஆரோக்கியம் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இது அரசின் மிகப்பெரும் சாதனையாகும். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தினை தற்போது அரியலூர் மாவட் டத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நந்தட்டி அங்கன்வாடி மையத்தில் 5 கர்ப்பினி தாய் மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டங்கள் வழங்கப்பட்டது.

மேலும், 0 முதல் 6 மாத குழந்தைகளுக்கு திட உணவு வேறு ஏதுமின்றி தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுவதால் தாய் மார்களின் ஆரோக்கி யத்தை பேணுவது அத்தியாவசியமாகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறிய ப்பட்ட 371 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் அடையாளமாக 5 கர்ப்பினி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. 129 தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 212 மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு தலா ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாக “பெண் குழந்தை யைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்“ திட்டத்தின் கீழ் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையிலான பிரச்சார வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்த லைவர் பொன்தோஸ், கூடலூர் வருவாய் கோட் டாட்சியர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித்திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, நகரமன்றத்தலைவர்கள் பரிமளா (கூடலூர்), சிவகாமி (நெல்லியாளம்), கூடலூர் நகராட்சி ஆணையாளர் சுவேதாஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img