fbpx
Homeபிற செய்திகள்நறுவீ மருத்துவமனையில் பிராக்டிகல் ரேடியாலஜி கருத்தரங்கம்

நறுவீ மருத்துவமனையில் பிராக்டிகல் ரேடியாலஜி கருத்தரங்கம்

இந்திய கதிரியக்க மருத்துவியல் மற்றும் இமேஜிங் சங்கம் சார்பில் பிராக்டிகல் ரேடியாலஜி பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் வேலூர் நறுவீ மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அமைப்பின் தலைவர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்தார். இந்திய கதிரியக்க மருத்துவியல் மற்றும் இமேஜிங் சங்கத்தின் வேலூர் கிளை தலைவர் டாக்டர் டி. மதன் மோகன் வரவேற்றார்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கின் நோக்கம் பற்றி இந்த அமைப்பின் மாநில செயலாளர் டாக்டர் புளோரா நெல்சன் விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கதிரியக்க துறை மருத்துவர்கள் டாக்டர் ஷியாம், டாக்டர் ஸ்ரீதர், சங்கத்தின் வேலூர் கிளை பொருளாளர் டாக்டர் சஹானா, நரம்பியல் மறுவாழ்வு நிபுணர் மைக்லே ராஜன், நறுவீ மருத்துவமனை கதிரியக்க துறை தலைவர் டாக்டர் அசோக் மித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img