fbpx
Homeபிற செய்திகள்மருத்துவர் நிர்மலா சதாசிவத்துக்கு துரோணாச்சார்யா விருது

மருத்துவர் நிர்மலா சதாசிவத்துக்கு துரோணாச்சார்யா விருது

உலகின் கருவாக்க துறையின் தலைசிறந்த டாக்டர்களின் ஆராய்ச்சி கட்டுரை மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அகில இந்திய துணைசெய் கருத்தரிப்பு கூட்டமைப்பில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி கட்டுரைகளை நிபுணர் குழுவினர் ஆராய்ந்து, சிறந்த டாக்டர்களை தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தியாயாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வருடம் ஒருமுறை சுழற்சி முறையில் நடைபெறும். மாநாட்டில் சிறந்த டாக்டருக்கு விருது வழங்கப்படுகிறது.

கருவாக்க மருத்துவதுறை மற்றும் பெண்கள் நலத்துறையில் சுமார் 36 ஆண்டுகளுக்கு மேலாக ஈரோடு மாருதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் ஜெனிசிஸ் ஐவிஎப்., அதிநவீன கருவாக்க மையத்தின் கருவாக்க துறையின் தலை மை மருத்துவர் நிர்மலா சதாசிவம் சேவை செய்து வருகிறார்.

அதேபோல் மூத்த தம்பதியருக்கும் (ICMR வழிகாட்டுதலின் படி) சிறப்பு சிகிச்சை அளித்து வருவதுடன், இந்தியாவின் முதல் கேப்ஸ்யூல் டெஸ்ட்டூயூப் குழந்தையை உருவாக்கியது, கருவாக்க துறையின் மிக உயர்ந்த தொழில்நுட்பமான பிளாஸ் டோசிஸ்ட் கருத ரிப்பு முறையில் சுமார் 50,000 குழந்தைகளுக்கு மேல் உரு வாக்கி பல தம்பதியினர் குழந்தை பாக்கியம் கிடைக்கசெய்துள்ளார்.

கரு அணுக்களின் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சி செய்து, கருவாக்க மருத்துவத்தில் அதிக வெற்றி சதவீதம் அளிக்கும் முறையை கண்டறிந்து முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ளார்.

இதற்காக தமிழகத் தின் தலைசிறந்த மருத்துவ ருக்கான விருதையும், கருவாக்க துறையில் சிறந்த பங்களிப்பிற்காக தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநரிடமும், இந்திய மருத்துவ சங்கத்திடமும் சிறந்த மருத்துவருக்கான விருதுகள் கிடைத்துள்ளது.

இவ்வாறான காரணங்களுக்காக நடப்பு ஆண்டுக்கான சிறந்த டாக்டராக ஈரோடு மாருதி மெடிக்கல் செண்டர் மருத்துவமனை மற்றும் ஜெனிசிஸ் ஐவிஎப்., அதிநவீன கருவாக்க மைய த்தின் கருவாக்க துறை யின் தலைமை மருத்துவர் நிர்மலா சதாசிவம் தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, அகில இந்திய துணைசெய் கருத்தரிப்பு கூட்டமைப்பின் சார்பில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவ மனை வளாகத்தில் மாநாட்டில், டாக்டர் நிர்மலா சதாசிவத்துக்கு மருத்துவ விருதுகளில் தலைசிறந்த விருதான “துரோணாச்சார்யா விருது” வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img