fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் ரத்ததான முகாம்

சிதம்பரத்தில் ரத்ததான முகாம்

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் ரத்ததான முகாம் தவ்ஹீத் மர்கஸ் பகுதியில் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த ரத்ததான முகாயினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொருளாளர் அப்துல் அஹது, மாவட்ட து.தலைவர் ரஹமத் துல்லாஹ், மாவட்ட மாணவரணி செயலாளர் பைபாஸ் கான், டாக்டர் எம்.சிவகாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இதில் கிளை நிர்வாகிகள் சிராஜுதீன், ஹபிப்ரஹ்மான் ஃபாருக், அக்பர்(ம)கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img