fbpx
Homeபிற செய்திகள்பாரதி விளையாட்டுக் குழு நடத்திய கபடி போட்டியில் டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரி அணி...

பாரதி விளையாட்டுக் குழு நடத்திய கபடி போட்டியில் டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரி அணி முதலிடம்

இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை காளப்பட்டி அருகில் உள்ள கைகோளம்பாளையம் பாரதி விளையாட்டுக் குழுவின் 38 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான ஆண்கள் கபடி போட்டி மற்றும் குழந்தைகள், பெண்களுக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டு நாக்அவுட் முறையில் விளையாடினர். இறுதியில் முதல் பரிசை டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை சுண்டக்காமுத்தூர் ஆசை நிலா அணியும், 3ம் இடத்தை வெள்ளானைப்பட்டி மாணிக்கம் மெமோரியல் கபடி குழு அணியும், 4ஆம் இடத்தை சிங்காநல்லூர் ஒயிட் ரோஸ் அணியும் பிடித்தன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சட்ட மன்ற உறுப்பினர்கள் பிஆர்ஜி.அருண்குமார் மற்றும் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசை வழங்கினர். ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன் பரிசு பெற்ற அணியினரை வாழ்த்தி பேசினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பாரதி விளையாட்டு குழுவின் தலைவர் சண்முகம், செயலாளர் முருகேசன், பொருளாளர் இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img