சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, நஞ்சுண்டாபுரம் வார்டு எண் 62 பகுதியில் உள்ள ஆர்ஆர் துரியா அடுக்கு மாடி குடியிருப்பு ஆர்.எச். ஓனர் வெல்ஃபேர் அசோசியேஷன் நிர்வாகிகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த் திக் (முன்னாள் எம்எல்ஏ) நேரில் சென்று சந்தித்து உரையாடினார்.
அப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவற்றை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்ட தோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்நிகழ்வில், ஆர்.ஆர்.துரியா அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க தலைவர் சுப்பிர மணியம், துணைத் தலைவர் மாரியப்பன், செயலாளர் முத்துக்குமார், துணைச் செயலாளர் சித்ராதேவி, பொருளாளர் குழந்தைவேல்.
திமுக பொதுக்குழு உறுப்பினர் வெ.ந.உதய குமார், வட்டக் கழக செயலாளர்கள் நியான் குமார், ந.சண்முக சுந்தரம், மாமன்ற உறுப்பினர் ரேவதி முரளி, பிஎல்ஏ 2 செல்வராஜ், சரஸ்வதி, சண்முகசுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.



