fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிக்கு உணவு வண்டி நன்கொடை

மாற்றுத்திறனாளிக்கு உணவு வண்டி நன்கொடை

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் வழக்கைப்போக்கை மாற்றும் வகையில், ரோட்ராக்ட் கிளப் ஆப் கோவை கேலக்சி மூலம் “கேலக்சி உணவகம்” என்னும் உணவு வண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது. பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று, கோவை பீளமேடு ஜிவி ரெசிடென்சி அருகே நடந்த இந்த நிகழ்வு மக்களின் கவனத்தை இழுத்தது. இந்த உணவகமானது ரவி என்ற மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டது.

மேலும் அவரை ஊக்குவிக்கும் விதமாக ரூ.5000 நன்கொடையாக வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளியின் வாழ்வை மேம்படுத்தும் இச்செயலானது மக்கள் மத்தியில் பெருமாதரவை பெற்றது. DARDO மற்றும் PSG கலைகல்லூரியின் உதவியோடு நடந்த இந்த நிகழ்வு, Equitas வங்கியின் CSR மேனேஜர் பாபா, ரோட்ராக்ட் 3201 வின் DRR சதிஷ் பாலகிருஷ்ணன், DARDO அமைப்பின் தலைவர், ஜெயப்ரபாஆகியோர் கேலக்சி உணவகத்தை துவக்கிவைத்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img