fbpx
Homeபிற செய்திகள்மாப்பிள்ளையூரணி கோவில் கொடை விழாவில் அன்னதானம்

மாப்பிள்ளையூரணி கோவில் கொடை விழாவில் அன்னதானம்

மாப்பிள்ளையூரணி கோவில் கொடை விழாவை யொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சமீர்வியாஸ் நகரில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 30ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்று தினசரி பூஜைகளுடன் 8ம் நாள் மதிய கொடை நடைபெற்று பொதுமக்கள் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து உணவருந்தினார்.

விழாவில் தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, திமுக கிளைச்செயலாளர் நாராயணமூர்த்தி, மற்றும் கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img