தேனி மாவட்டம், கெங்குவார் பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எஸ்.கே.எம். மஹாலில், டிடி124 கெங்குவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து வந்த செய லாளரும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தந்தை யுமான வீ.பழனிச்சாமி பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா நடந்தது.
தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வைரமுத்து தலைமை தாங்கி பேசியதாவது: இது முத்திரை திருவி ழாவாக, இவ்விழா அமைந்துள்ளது.
இந்த மண்ணின் மைந்தனான தந்தைக்கு அவரது மகன் விழா எடுக்கிறார். தந்தை யாரென்றால் ஒரு கடன் சங்கத்தில் வேலை பார்த்து, தன் மகனை மாவட்ட கலெக்டர் ஆக்கியவர்.
இம்மண்ணிற்கு பெருமை. இளங்கோவடிகள் சொல்கிறார் கண்ணகிக்கு பெருமை கோவலனின் மனைவி என்பதனாலா, கற்புக்கரசி என்பதனாலா, பூம்புகாரின் புத்திரி என்பதனாலா? கற்புக்கரசி என பெண்களால் புகழப்பட்டவள் கண் ணகி.
ஒரு பெண்ணுக்கு பெருமை ஆண்கள் கூடி பாராட்டுவதைவிட பெண்கள் கூடி பாராட்டுவதுதான். அதனைப்போன்று ஒரு தகப்பனுக்கு எது பெருமை என்றால், மகன் பாராட்டுவது தான் மிகப்பெரிய பெருமை.
பழனிச்சாமி கஷ்டப்பட்டு பிள்ளைகளை இந்த சமூகத்தில் மிகப் பெரிய ஆளாக்கி இருக்கிறார். தனது குடும்பம் மட்டுமல்லாமல் பிறக்கு அவரால் முடிந்த வரை உதவியையும் செய்து தந்து இருக்கிறார்.
இந்த உதவி செய்யும் பணி எல்லோரிடத்திலும் எளிதில் அமைந்து விடாது. பணி ஒய்;வு பெற்ற பிறகும் பிறக்கு உதவி செய்யும் பணி தொடர வேண்டும் என பழனிச்சாமியை வாழ்த்துகிறேன் என்றார்.



