திமுக மகளிரணி மேற்கு மண்டல மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (டிச.29) நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதையொட்டி, 2,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
மதுரையில் பொதுக்குழு கூட்டம், கரூரில் முப்பெரும் விழா, திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு என தனது படைப்பலத்தை தொடர்ந்து பறைசாற்றி வருகிறது. இளம் வாக்காளர்களை குறி வைத்து திருவண்ணாமலையில் இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டை நடத்திய திமுக, அடுத்தகட்டமாக மகளிரை மையப்படுத்தி, “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டை ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ளது.
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் இன்று (29ம் தேதி) மாலை நடைபெற உள்ள இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சிறப்புரை யாற்ற உள் ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சு.முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப் பாளருமான செந்தில் பாலாஜி, மாவட்ட செயலா ளர்கள், நிர்வாகிகள் பங் கேற்கிறார்கள்.
13 கழக மாவட்டங்கள், 39 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். ஒன்றரை லட்சம் மகளிருக்கும் மாவட்டம் வாரியாக தனித்தனி வண்ணங்களுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட் டத்தை சேர்ந்த நிர்வாகிகள் அமர்வதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதற்கு மேற்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தேவைப்படின் நாப்கின் வழங்கவும், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 350 மொபைல் கழிவறைகள், மினி கிளினிக், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. மூன்று வேளை உணவு, தடையற்ற தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
150 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ள மாநாட்டில் 4,000 வாகனங்களை நிறுத்துவ தற்கு தனியிடம் ஒதுக் கப்பட்டுள்ளது. மகளிர் மாநாட்டில் பறையிசை, சிலம்பம், வாண வேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களின் அணி வகுப்பு டன் விழா மேடைக்கு அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரி மைத் தொகை, கட்டண மில்லா பேருந்துப் பயணம், புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி என திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மாநாட்டுத் திடல் முழுவதும் விளம்பர பதாகைகளாக வைக் கப்பட்டுள்ளன.
திராவிட இயக்கத்தால் தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும் போராட்ட வரலாற்றையும் வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் பல்லடத்தில் நடைபெறும் மாநாடு சொல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக அரசின் மகளிர் நலன் சார்ந்த திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர் பார்ப்பும் எழுந்துள்ளது.
மாநாடு நடக்கும் இடத் தில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் தலை மையில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் மாநாட்டில், பேசுகின்றனர்.
மகளிர் மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் 13 வகையான உணவு வகைகளுடன் மதிய விருந்து வழங்கப்படுகிறது. மாநாட்டின் நிறைவாக தீர்மானங்கள் நிறைவேற்றப் படுகின்றன.
மாநாட்டில் பங்கேற்ப தற்காக முதல்வர் ஸ்டா லின் இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். முன்னாள் அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், மாந கராட்சி ஆணையாளர் சிவ குருபிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் துரை.செந்தமிழ்ச் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து சின்னியம் பாளையத்தில் உள்ள நட் சத்திர ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கும் முதல்வர், மாலை 4 மணிக்கு கார் மூலம் பல்லடம் செல்கிறார். மாநாடு முடிந்த பின்னர் இரவு கோவை விமான நிலையத்துக்கு வந்து, சென் னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
இதேபோல, துணை முதல்வர் உதயநிதி இன்று மதியம் கோவை வந்தார். அங்கிருந்து பல்லடம் செல்கிறார். மாநாடு முடிந்த பின்னர் கோவை சின்னி யம்பாளையத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அவர், நாளை ஆர்.எஸ்.புரத்தில் கட்டப் பட்டுள்ள மாநகராட்சி ஹாக்கி மைதானத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர், கோவையிலி ருந்து ஈரோட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந் தர், எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.



