எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை, ‘ஐந்தாம் தலைமுறை ஆட்டோகிராஃப்ட் குருத்தெலும்பு திசு மாற்று சிகிச்சையை’ வெற்றிகரமாக செய்திருக்கிறது. இது, சிகிச்சை பெறும் நோயாளி மருத்துவமனையில் தங்குவதற்கு அவசியம் இல்லாத ஒரு நவீன ‘டே கேர்’ ஆர்த்ரோஸ்கோபிக் சிகிச்சை முறையாகும்.
ஃபோக்கல் கான்ட்ரல் குறைபாடுகள், ஆஸ்டியோகாண்ட்ரல் புண்கள், முதுமை மூட்டழற்சி முன்னதாகவே உருவாகியிருப்பது மற்றும் கான்ட்ரோமலாசியா (குருத்தெலும்பு மெலிவு) முழங்கால் சில் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதில் இந்த நவீன குருத்தெலும்பு திசு மாற்று சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எம்ஜிஎம் மலர் மருத்துவமனை 2018 ஆம் ஆண்டு முதல் இந்த நவீன சிகிச்சை உத்தியை முன்னோடித்துவமாக அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து எலும்பியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் நந்த்குமார் சுந்தரம் கூறுகையில், ” ஆட்டோகிராஃப்ட் குருத்தெலும்புத் திசு மாற்று முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ‘ஃபைப்ரின் க்ளூ’ எனும் இயற்கையான உயிரியல் பசையைப் பயன்படுத்தி ஒட்டுத்திசு பாதுகாப்பாகப் பொருத்தப்படுகிறது. இச்செயல்முறைகள் அனைத்தும் ஒரே கட்டமாக, மிகச் சிறிய துளையிடப்பட்டு செய்யப்படும் ஆர்த்ரோஸ்கோபிக் முறையில் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் தற்போது பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக முதுமை மூட்டழற்சி (ஆஸ்டியோஆர்த்ரிடிஸ்) காரணமாகக் கடுமையான முழங்கால் வலியுடன் நடப்பதில் அதிக சிரமத்தை அனுபவித்து வந்தார். குருத்தெலும்பு சேதம் மற்றும் மூட்டு வடிவ மாற்றம் காரணமாக அவருக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலை இருந்தது.
ஆனால், 2018-ம் ஆண்டில் இந்த ஒரே கட்ட ஆட்டோகிராஃப்ட் குருத்தெலும்பு மாற்று சிகிச்சையை, எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் மேற்கொண்ட பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் எவ்வித வலியுமின்றி முழுமையாக குணமடைந்துள்ளார். இந்த புதுமையான செயல்முறை உத்தி நீண்டகாலத்திற்கு பயனளிக்கும் சிறப்பான தீர்வையும், வலி நிவாரணத்தையும் வழங்குகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அடையார், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி வேணுகோபால் பட் கூறியதாவது:
நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும், குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட நவீன சிகிச்சை முறைகளை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பையும், செயல்திறனையும் நீண்டகாலமாக பயனளித்து வரும் இந்த சிகிச்சையின் வெற்றி எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு கூறினார்.



