கோவை முதலிபாளையத்தில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, ஒன்றிய, நகர, பேரூர், பகுதிக் கழக நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை மற்றும் மகளிர் பாசறைக் கூட்டம் கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் நடைபெற்றது.
இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திமுக மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி,
மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் தமிழரசி, திமுக மாவட்ட செயலாளர்கள் தளபதி முருகேசன், நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போட் ராஜேந்தர், டிஆர்.சண்முகசுந்தரம், நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், தொமுச எல்பிஎப் தொழிற்சங்க துணைப்பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்ப £ளர்கள் கலந்து கொண்டனர்.