fbpx
Homeபிற செய்திகள்கேப்டன் இருந்திருந்தாலும் இதே கூட்டணியில் தேமுதிக சேர்ந்திருக்கும் - நிர்வாகி பேச்சு

கேப்டன் இருந்திருந்தாலும் இதே கூட்டணியில் தேமுதிக சேர்ந்திருக்கும் – நிர்வாகி பேச்சு

தேமுதிக அமைத்துள்ள கூட்டணியை மக்கள் விரும்புவதாகவும், கேப்டன் இருந்திருந்தால் இதே கூட்டணியைத்தான் அமைத்திருப்பார் என்றும் தேமுதிக நிர்வாகி சிட்டி கே.ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

தேமுதிக.,வின் கோ வை மாநகர மாவட்ட செயலாளர் சந்துரு, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கோவிந்தராஜ், பீளமேடு பகுதிக்கழகச் செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோரின் ஆலோச னையின் பேரில் மாவட் டம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, 26 வட்டக்கழகத்தின் சார்பில் பீளமேடு பகுதியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டக்கழகச் செயலாளர் சிட்டி கே.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சியினருடன் இணக்க மாக செல்வது மற்றும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து சிட்டி கே.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தது போல், கூட்டணிக்காக எங்களால் முடிந்த அளவுக்கு கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாக செயல்பட்டு, வாக்குவங்கியை அதிகரிக் கும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வரவிருக்கும் தேர் தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்போம். சமீபத்தில் வழங்கப்பட்ட ரூ.5,000 நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் எதிர்க்கட்சியினர் பீதியில் உள்ளனர்.

எங்கள் கூட்டணியை மக்கள் வரவேற்கின்றனர். கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் இந்த கூட்டணியைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்.
கழகத்தின் செயலாளர் சொல்வதற்கு கட்டுப்பட்டு, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு, எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம். ஸ்டா லின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img