fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவன ஆண்டு விழா சின்னத்திரை நடிகர் புகழ் பங்கேற்றார்

கோவையில் மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவன ஆண்டு விழா சின்னத்திரை நடிகர் புகழ் பங்கேற்றார்

துபாய் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக, சுற்றுலா துறையில் சாதனை படைத்து வரும் மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம், கோவை செல்வபுரம் பகுதியில் துவங்கி, ஓரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை விழாவாக இந்நிறுவனம் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நட்சத்திரம் புகழ் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்தும், கேக் வெட்டியும், ஒரு ஆண்டை கடக்க உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள், மற்றும் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்து பேசிய மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி பெருமாள் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
சர்வதேச டூர் பேக்கேஜ், குடும்ப சகிதம் மற்றும் குழு சகித பேக்கேஜ், டொ மெஸ்டிக் டூர் பேக்கேஜ், உலக அளவிலான விசா சேவைகள், விமானம், பஸ், ரயில் உள்ளிட் டவை களுக்கான டிக்கெட் புக்கிங், ட்ராவல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவை களை சிறந்த முறையில் இங்கு வழங்கி வருகிறோம்.

நமது நிறுவனம் மூலமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் வெளிநாடு களுக்கும் ஆயிரக்கணக்கானோர், உள்ளுர் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சியுடன் திரும்பி வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்து பேசிய சின்னதிரை நட்சத்திரம் புகழ் கூறுகையில், நான் எங்கு சென்றாலும் எனக்கு அனைத்து டிக்கெட் களையும் இந்த நிறுவனம் மூலமாகவே செய்து கொள்கிறேன். நீங்களும் ஆதரவு தாருங்கள் என்றார்.

மேலும் அவர் கூறுகை யில், தற்போது, சின்ன சின்ன பட்ஜெட்களில் ஆயிரகணக்கான திரைப் படங்கள் ஒடிடியில் வெளியாகி வருகின்றது. இதன் மூலம் சினிமா துறை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது, மேலும் நடிப்பு திறன் கொண்ட பலரது திறன் இதன் மூலமாக வெளிவந்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன் என்றார். மேலும் சினிமா என்பது எனது உயிர், திரையுலகில், சின்ன சின்ன படங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க முன்வர வேண்டும் என் பதே எனது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img