கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி, மத்தூர் ஒன்றியம் ராமகிருஷ்ணபதி ஊராட்சி காமாட்சி பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் ஆர்.நாகரத்தினம். தற்போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளராகவும், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் இலக்கிய அணி ஒன்றிய செயலாளர், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பணியாற்றி வந்துள்ளார்.
ஆர்.நாகரத்தினம் கூறியதாவது:
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான், ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடுவதற்கு 1985 முதல் தற்போது 2026 வரை 9 முறை அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பு மனு அளித்துள்ளேன். இந்த விருப்பு மனு அளித்த பொழுது அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரிடம் ஆட்சி மன்ற குழு நேர்காணலில் இரண்டு முறையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இரண்டு முறையும், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 1988 யில் நேர்காணலுக்கு அழைத்து கழக வளர்ச்சி நிதியாக 1 லட்சம் ரூபாய் செலுத்தி மனு செய்து ஆசி பெற்றேன். அதே போல் 2011ல் ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதிக்கு மனு அளித்து நேர்காணலில் கலந்து கொண்டேன்.
2001ல் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். மேலும் அதிமுக தலைமை கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு இரண்டு முறை சிறை சென்றுள்ளேன். தற்போது மத்தூர் ஒன்றிய இலக்கிய அணி செயலாளராக 12 வருடங்களாகவும், கழக மாநில பொதுக்குழு உறுப்பினராக சுமார் 7 ஆண்டுகளாகவும் பணிபுரிந்து வருகிறேன். ஊத்தங்கரை தனித் தொகுதி தேர்தல் இணை செயலாளராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளேன்.
கடந்த 40 ஆண்டு காலமாக கட்சி வளர்ச்சிக்காக பாடுபடும் எனக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக துணை பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமியும் என் பணியை ஆராய்ந்து ஆய்வு செய்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஊத்தங்கரை தனி தொகுதிக்கு என்னை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.



