கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்களில் 6-வது ‘பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
‘நாளைக்கான இந்தியாவைப் பாதுகாத் தல்’ என்ற கருப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக, என்.சி.சி மாணவர்களுக்காக ‘பாதுகாப் புத்துறை தொழில்நுட்பக் குழுமம்‘ எனும் புதிய தளம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கல்லூரியின் முதல்வர் எம்.எழிலரசி, இன்றைய காலகட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு என்பது செயற்கை நுண்ணறிவு (AI), சைபர் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களைச் சார்ந்து இருப்ப தாகக் குறிப்பிட்டார்.
கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குனர் ரியர்அட்மிரல் வி.மோகன்தாஸ் பேசுகை யில், “ தற்போது ட்ரோன்கள் மற்றும் மின்னணுத்தகவல் தொடர்புகள் சார்ந்த நவீனப்போர் முறைகள் வந்து விட்டன.
எனவே, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை ராணுவத்தில் அதிகரித்துள்ளது,” என்றார்.
தொடர்ந்து கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை கமாண்டன்ட் கிருஷ்ணகுமார், ஐ.என்.எஸ் அக்ராணியின் கமாண்டர் ஸ்ரீஹரி ஆகியோர் தேசப் பற்றையும், தொழில்நுட் பத்திறனையும் பற்றி பேசினர்.



