உலகின் முன்னணி குளோபல் தகவல் தொடர்பு மற்றும் அழைப்பாளர் ஐடி தளமான ‘ட்ரூகாலர்’ (Truecaller), ஸ்வீடனுக்கு வெளியே, முதல் முதலாக இந்தியாவின் தென் பிராந்தியநகரமான பெங்களூருவில் அலுவலகத்தை திறந்துள்ளது.
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மெய்நிகர் நடைமுறையில் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:
ஒரு பாதுகாப்பான மற்றும் பாத்திரமான இணைய மின்வெளி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு என்பது நமது டிஜிட்டல் பொருளாதாரத்தின் விரிவாக் கம் மற்றும் டிஜிட்டல் சமூகத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியத் தேவையாகும்.
நவ நாகரீக டிஜிட்டல் சமூகத்தின் தேவைகளுக்கு மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளை எதிர்கொள்ள அதிக மேம்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் தேவைப்படுகின்றன.
சேவைகள்
அழைப்பாளர் ஐடி மற்றும் ஸ்பேம் கண்டறிதல் சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த ஊடாடல்கள் மற்றும் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதில் ட்ரூகாலர் மதிப்புமிக்க பங்காற்றிவருகிறது.
இந்தியாவின் மூன்று குறியிலக்குகளை எட்டி அடையும் வகையில் பல்வேறு நூதனமான கண்டுபிடிப்புகளை இந்த மையம் உருவாக்கி இயக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
ட்ரூகாலரின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆலன் மாமெடி, இணையத்தில் எங்கள் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் மதிப்பீடுகளை பாதுகாக்க என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலாக அடியெடுத்துவைத்த, ‘ட்ரூகாலர்’ இன்று 338 மில்லியன் மாதாந்திர அடிப்படையிலான தீவிர பயனர்களோடு வளர்ச்சியடைந்துள்ளது. அவர்களில் சுமார் 246 மில்லியன் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.