லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (எல்எம்டபிள்யூ) நடத்தும் டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட் டியில் (DJMPC) பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் முதல் பரிசை வென்றார்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இப்போட்டியில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திறமையா னவர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
டிஜே நினைவு புகைப்பட போட்டி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி ஜெயவர்த்தனவேலு நினைவாக நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் டிஜே புகைப்பட விருப்பத்தின் நினைவாக இது கொண்டாடப்படுகிறது.
புகைப்படப் போட்டியின் முதலாவது பதிப்பு 2012-ல் நடந்தது. தற்போது 12-வது பதிப்பாக நடத்தப்பட்டுள்ளது. புகைப்பட கலையில் நிபுணத்துவம் பெற்ற மும் பையை சேர்ந்த டாக்டர் அனிஷ் அந்தேரி, இலங்கையை சேர்ந்த டாக்டர் லலித் எகனாயகே, பெங்களுருவை சேர்ந்த சச்சின் ராய் உள்ளிட்டோர் அடங்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தன. கே. மருதாச்சலம், ஏர்பிஎஸ், ஏபிஎஸ்ஏ, ஏஎப்ஐஏபி போட்டியின் ஆலோசகராக செயல்பட்டார்.
போட்டி யின் நிர்வாகியாக விக்ரம் சத்யநாதன் தேர்வு செய்யப்பட்டார். போட்டியின் பரிசுத் தொகையாக ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு போட்டியில் 5116 படங்கள், உலகம் முழுவதும் 26 நாடுகளிலிருந்து 936 பேர் பங்கேற்றனர்.
‘இயற்கையின் புதுமை மற்றும் இயற்கையின் காட்சிகள்’ என, இரு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது முயற்சியைப் பாராட்டி சான்றிதழ்களுடன் பரிசுகள் வழங்கப்பட்டன.
இரண்டு பிரிவிலும் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன.டிஜே நினைவு புகைப்பட போட்டிக்கான பரிசளிப்பு விழா கோவையில் கஸ்தூரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் நடந்தது.
புகைப்படக் கண்காட்சி வரும் 5-ம் தேதி வரை நடக்கும். ‘இயற்கையின் புதுமை’ தலைப்பின் கீழ் பெங்களூர் அசோக் நாயர், இலங்கை திரிகோணமலை தர்ஷன் பெஞ்சமின் ஜூலியன் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களில் பரிசுகளை வென்றனர்.
‘இயற்கையின் காட்சிகள்’ தலைப்பின் கீழ் பொள்ளாச்சி கா.தனுபாரன், மேற்கு வங்கம், கொல்கத்தா ராஜாஷி பானர்ஜி ஆகியோர் முறையே முதல் இரண்டு பரிசுகளை வென்றனர்.