fbpx
Homeபிற செய்திகள்குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் பீளமேடு, கிரியம்மன் கோவில் வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உடன் மாமன்ற உறுப்பினர் அம்பிகா, தனபால், உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img