எல்.எம்.டபிள்யூ லிமிடெட் நடத்தும் டி.ஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி 14வது பதிப்பாக நடத்தப்பட்டது. டிஜே நினைவு புகைப்பட போட்டிக்கு இந்த ஆண்டும் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. இதில் பங்கேற்க மே 1 முதல் ஜூன் 30 வரை ஆர்வமுள்ள அனைவருக்கும் இலவச வாய்ப்பு வழங்கப்பட்டது.
மொத்தம் 32 நாடுகளை சேர்ந்த 2,292 நபர்களிடம் இருந்து 8,925 படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்படும் படங்களை மதிப்பீடு செய்ய புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்களான லக்ஷிதா கருணாரத்ன (இலங்கை) சிவாங் மேத்தா மற்றும் சவுராப் தேசாய் (இந்தியா) நடுவர்களாக செயல்பட்டனர். இப்போட்டிக்கான வழிகாட்டியாக கே.மருதாச்சலம் போட்டியின் நிர்வாகியாக விக்ரம் சத்தியநாதன் ஆகியோர் செயல்பட் டனர். இந்த போட்டியின் விருது வழங்கும் விழா கோவை அவி நாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலையரங்கில் நடை பெற்றது. வைல்ட் போட்ரைட் மற்றும் நேச்சர்ஸ்கேப்ஸ் ஆகிய 2 தலைப்புகளில் முதல் இரண்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது முயற்சியை பாராட்டி சான்றிதழ்களுடன் பரிசுகள் வழங் கப்பட்டன. மேலும் இரண்டு பிரிவிலும் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன.

நேச்சர்ஸ் கேப்ஸ் என்ற தலைப்பில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அர்னாட் ஃபாரே முதல் பரிசையும், துபாயை சேர்ந்த திலீப் இரண்டாம் பரிசையும் வென்றனர். வைல்ட் போட்ரைட் என்ற தலைப்பில் கேரளாவை சேர்ந்த சந்தீப் தாஸ் முதல் பரிசையும் மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த காசிம் முகமது இரண்டாம் பரிசையும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, எல். எம்.டபிள்யு நிறுவனத்தின் தலை வர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு 10 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இதில் சிறந்த புகைப்படங்கள், பொதுமக்கள் பார் வைக்காக கண்காட்சியாக ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



