தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பிரதிபலன் எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாகவும், வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ 15.09.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.50,000 வைப்பு நிதியாக வழங்கி வருகிறார்கள். அந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியவுடன் இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பெண்கள் உயர்கல்வி கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது.
செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒரு வரலாற்று திட்டமாகவும், மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடி திட்டமாகவும், பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையிலும், பொருளாதார நிலையை மேம்படுத்திடும் வகையில் குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
விண்ணப்பப்பதிவுகளை மேற்கொள்ளும் பணியில் மொத்தம் 2,337 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 1,157 நியாயவிலைக் கடைகள் மற்றும் 6,87,171 குடும்ப அட்டைகள் உள்ளன. விண்ணப்பப்பதிவுக்காக மொத்தம் 1,157 முகாம்கள் நடத்தப்பட்டன.
திண்டுக்கல்(கிழக்கு) வட்டத்தில் மொத்தமுள்ள 1,07,333 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 40,437, இரண்டாம் கட்ட முகாமில் 36,621, சிறப்பு முகாம்களில் 3,479 என மொத்தம் 80,537 விண்ணப்பங்களும், திண்டுக்கல்(மேற்கு) வட்டத்தில் மொத்தமுள்ள 95,681 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 35,976, இரண்டாம் கட்ட முகாமில் 31,105, சிறப்பு முகாம்களில் 3,888 என மொத்தம் 70,969 விண்ணப்பங்களும், நிலக்கோட்டை வட்டத்தில் மொத்தமுள்ள 94,037 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 37,449, இரண்டாம் கட்ட முகாமில் 31,648, சிறப்பு முகாம்களில் 2,976 என மொத்தம் 72,073 விண்ணப்பங்களும், நத்தம் வட்டத்தில் மொத்தமுள்ள 48,213 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 21,498, இரண்டாம் கட்ட முகாமில் 17,377, சிறப்பு முகாம்களில் 1,479 என மொத்தம் 40,354 விண்ணப்பங்களும், ஆத்து£ர் வட்டத்தில் மொத்தமுள்ள 52,288 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 18,331, இரண்டாம் கட்ட முகாமில் 18,884, சிறப்பு முகாம்களில் 2,420 என மொத்தம் 39,635 விண்ணப்பங்களும், பழனி வட்டத்தில் மொத்தமுள்ள 95,631 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 34,297, இரண்டாம் கட்ட முகாமில் 31,639, சிறப்பு முகாம்களில் 4,835 என மொத்தம் 70,771 விண்ணப்பங்களும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மொத்தமுள்ள 64,365 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 27,212, இரண்டாம் கட்ட முகாமில் 17,845, சிறப்பு முகாம்களில் 3,195 என மொத்தம் 48,252 விண்ணப்பங்களும், வேடசந்து£ர் வட்டத்தில் மொத்தமுள்ள 63,232 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 27,184, இரண்டாம் கட்ட முகாமில் 23,073, சிறப்பு முகாம்களில் 2,674 என மொத்தம் 52,931 விண்ணப்பங்களும், குஜிலியம்பாறை வட்டத்தில் மொத்தமுள்ள 33,312 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 13,516, இரண்டாம் கட்ட முகாமில் 12,427, சிறப்பு முகாம்களில் 1,390 என மொத்தம் 27,333 விண்ணப்பங்களும், கொடைக்கானல் வட்டத்தில் மொத்தமுள்ள 33,079 குடும்ப அட்டைதாரர்களில் முதற்கட்ட முகாமில் 11,491, இரண்டாம் கட்ட முகாமில் 13,646, சிறப்பு முகாம்களில் 1,851 என மொத்தம் 26,988 விண்ணப்பங்களும், என மாவட்டத்தில் மொத்தமுள்ள 6,87,171 குடும்ப அட்டைதாரர்களில், முதற்கட்ட முகாமில் 2,67,391 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்ட முகாமில் 2,34,265 விண்ணப்பங்களும், சிறப்பு முகாம்களில் 28,187 விண்ணப்பங்களும், என மொத்தம் 5,29,843 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழகத்தில் 1.06 கோடி மகளிர் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தில், தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. விடுபட்டவர்கள் கூடுதல் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
‘நிறைவேறும் சின்ன சின்ன தேவை’
இத்திட்டத்தில் பயனடைந்த திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கள்ளிமந்தையம் ஆண்டவன் மனைவி ஜெயசித்ரா தெரிவித்ததாவது:
கணவர் ஆட்டோ டிரைவர். இரண்டு மகன்கள் உள்ளனர். முதல்வர் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்தேன். விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இந்த தொகை குடும்பச் செலவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ரொம்ப சந்தோசம். அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் சின்னச்சின்ன தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இல்லத்தரசிகளுக்கு இந்த தொகை பயனுள்ளதாக உள்ளது. முதல்வருக்கு நன்றி என்றார்.
‘சிறிய சேமிப்பு’
கள்ளிமந்தையம் சதீஸ்குமார் மனைவி பழனியம்மாள் தெரிவித்ததாவது:
கணவர் கூலித்தொழிலாளி. ஒரு குழந்தை உள்ளது. குறைந்த வருமானத்தில் வீட்டு வாடகை, சாப்பாடு என அத்தியாவசிய தேவைகளை சமாளிப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. முதல்வர் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்தேன்.
விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. குடும்பத்திற்கு சிறிய அளவிலான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. இந்த தொகை சிறிய சேமிப்பாகவும் அமைகிறது. மனநிறைவாக இருக்கிறது.
அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறனும், மகிழ்ச்சியா இருக்கனும் என்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நன்றி என்றார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் காட்டிய வழியில் செயல்பட்டு வரும் முதல்வர், ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினால் பெண்கள் தங்களுக்கான சின்னசின்ன தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொண்டு, சிரமமின்றி வாழ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.
தொகுப்பு:
அ.கொ.நாகராஜபூபதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்.