திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் 10,000 கி.மீட்டர் சாலைகளை சீரமைக்க ரூ.4,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2022-23ம் ஆண்டில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.7.33 கோடி மதிப்பீட்டில் 10 பணிகள் எடுக்கப்பட்டு, 2 பணிகள் முடிவடைந்துள்ளன, 4 பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.26.31 கோடி மதிப்பீட்டில் 56 பணிகள் எடுக்கப்பட்டு, 6 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.38.65 கோடி மதிப்பீட்டில் 55 பணிகள் எடுக்கப்பட்டு, 2 பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.9.82 கோடி மதிப்பீட்டில் 8 பணிகள் நடைபெற்று வருகின்றன. நத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.10.54 கோடி மதிப்பீட்டில் 12 பணிகள் எடுக்கப்பட்டு, 2 பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.10.57 கோடி மதிப்பீட்டில் 26 பணிகள் எடுக்கப்பட்டு, 2 பணிகள் முடிவடைந்துள்ளன. ஒரு பணி நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.12.18 கோடி மதிப்பீட்டில் 16 பணிகள் எடுக்கப்பட்டு, 2 பணிகள் முடிவடைந்துள்ளன.
பழனி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ-.18.51 கோடி மதிப்பீட்டில் 31 பணிகள் எடுக்கப்பட்டு, ஒரு பணி முடிவடைந்துள்ளது, 2 பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.29.35 கோடி மதிப்பீட்டில் 62 பணிகள் எடுக்கப்பட்டு, 22 பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.33.68 கோடி மதிப்பீட்டில் 80 பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.6.36 மதிப்பீட்டில் 17 பணிகள் எடுக்கப்பட்டு, 5 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2 பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் 18 பணிகள் எடுக்கப்பட்டு, ஒரு பணி நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.7.11 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.18.58 கோடி மதிப்பீட்டில் 12 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் ரூ.236.88 கோடி மதிப்பீட்டில் 417 பணிகள் எடுக்கப்பட்டு, 18 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 36 பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ. திலகவதி ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், அமைக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்தார். பின்னர் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட சாலைகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கண்ட பணிகள் அனைத்தையும் தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.



