திருச்சி நேரு நினைவுக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸின் மாநில அளவிலான போட்டியில் ஈரோடு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல் பரிசைப் பெற்றது.
பவானி நதியை ஆகாய தாமரையில் இருந்து பாதுகாக்கும் வழி என்ற ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்த 8ம் வகுப்பு மாணவி தன்மதி, 7ம் வகுப்பு மாணவி மேக வர்ஷினி ஆகியோர் சமர்ப் பித்த கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது.
மாநிலத்தில் உள்ள 14139 பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட 200 ஆய்வுக் கட்டுரைகளில் இது சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது ஜனவரி மாதம் நடை பெறவிருக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸில் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
சாதனை மாணவிகள் தன்மதி, மேகவர்ஷினி ஆகியோரை வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலர் எஸ்.டி. சந்திரசேகர், முதல்வர் லதா, நிர்வாகக் குழு
உறுப்பினர் எம்.யுவராஜா, நிர்வாக மேலாளர் சென்னியப்பன் ஆகியோர் வெகு வாகப் பாராட்டினர்.



