பிலிப்பைன்ஸ், லண் டன், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம் என உலகளவில் பல நாடுக ளிலும் அமோக வெற்றி பெற்ற பின், கோகோ-கோலா இந்தியா அதன் கோக் ஸ்டூடியோ தமிழ் – முதல் பிராந்திய பதிப்பை சென்னையில் துவக்குகிறது. 25-க்கும் மேற்பட்ட திறமையான கலைஞர்களு டன் 8 பாடல்களை வெளியிடவுள்ளது.
இது நம்ம இசை
கோக் ஸ்டூடியோவின் கருப்பொருளான “இது நம்ம இசை”யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் ‘this is our music’. இது தமிழ் கலாச்சாரத்தின் செழுமையு டன் கலைஞரின் பிரதிபலிப் பைக் காட்டுகிறது.
யாழ் போன்ற கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமான இசைக்கருவிகளின் அனுபவமிக்க ஒலிகளால் பாடல்கள் வலுப்பெறுகின்றன.
“உலகெங்கிலும் உள்ள 80 மில்லியன் தமிழ் பேசும் மக்களுடன் தமிழ் இசையின் பெருமைமிக்க பன்முகத்தன்மையைக் கொண்டாட கோக் ஸ்டூடியோ தமிழ் தளம் நமக்கு உதவும் மற்றும் உலகளவில் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் இசையை கொண்டு செல்ல உதவும்” என கோகோ கோலா இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசியா மார்க்கெட்டிங், துணைத் தலைவர் அர்ணாப் ராய் தெரிவித்தார்.
இசை, இதயத்துடன் இணைவதற் கான ஒரு வழியாகும். கோக் ஸ்டூடியோவின் பெருமை மிக்க மரபு இப்போது தமிழுக்கு வருகிறது. சில சிறந்த கலைஞர்களின் இசையுடன் இதயங்களை இணைக்கிறது, என GroupM, இந்தியா முதலீடுகள், வர்த்தகம் மற்றும் கூட்டாண்மையின் தலைவர் அஸ்வின் பத்மநா பன் கூறினார்.
கோக் ஸ்டூடியோ தமிழின் சீசன் ஒன்றில் ஹிப்-ஹாப் பிரபலம் அறிவு மற்றும் புகழ்பெற்ற இசைத் தயாரிப்பாளர் ஷான் ரோல்டன், பல பிரபல கலைஞர்களுடன் இணைய உள்ளனர் –
புஷ்பவனம் குப்புசாமி, கானா உலகநாதன், சஞ்சய் சுப்ரமணியன், சின்மயி ஸ்ரீபாதா, பென்னி தயாள், ஜானு அன்ட் தி பேன்ட், ஆஃப்ரோ, கதீஜா ரஹ்மான், மீனாட்சி இளையராஜா ஆகியோருடன் ஜான் பிரதீப், கானா விமலா, முல்லைக்கலைக்குழு, முத் தம்மாள் மற்றும் முத்தய்யா மற்றும் அரிபுல்லா ஷா ரஃபே இணைய உள்ளனர்.