fbpx
Homeபிற செய்திகள்நேரு பிறந்த நாள் விழா

நேரு பிறந்த நாள் விழா

நேரு பிறந்த நாள் விழா மற்றும் குழந்தைகள் தினவிழா தர்மபு-ரி, சாலை விநாயகர் சாலையிலுள்ள பாரத மாதா மணி மண்டபத்தில் நேற்று (14ம் தேதி) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு தலைவர் மா.பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் பாரத மாதா சிலைக்கு ஹரிஷ், தேன்மொழியும், காந்தி சிலைக்கு காளியப்பன், சுரேஷ் ஆகியோரும், ஜவஹர்லால் நேரு சிலைக்கு பெ.கௌதமன், ரா.மாதேஸ்வரன், சக்திவேல் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் தருமபுரி நகராட்சி நடுநிலைப் பள்ளி சந்தைப்பேட்டை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தலைவர் மா.பிரதீப்குமார் அவர்கள் எழுதுப்பொருட்களை வழங்கினார். இப்பொருட்களை செயலாளர்
ஆசிரியர் வ.சௌந்திரபாண்டியன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சுதா பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அர்த்தநாரி, கார்த்திகேயன், இராஜாகிருஷ்ணன், ராமன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
விழா நிறைவில் செய்திதொடர்பாளர் வினோத் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img