fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் 16 பேருக்கு வீடு கட்டுவதற்கு ரூ.33.60 லட்சம் மானியம்: மேயர் வழங்கினார்

திருப்பூரில் 16 பேருக்கு வீடு கட்டுவதற்கு ரூ.33.60 லட்சம் மானியம்: மேயர் வழங்கினார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பயனாளி களுக்கு ரூ.33.60 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு அரசு மானியம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் நேற்று (மார்ச் 17) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இந்நிகழ்ச்சி நடந்தது.

மேயர் ந.தினேஷ்குமார் 16 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.33.60 லட்சம் மானியத்தில் வீடு கட்டுவ தற்கான ஆணையினை வழங்கி பேசியதாவது:
வீடுகள் இல்லாத ஏழை, எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்து, அதனை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டார்.

விண்ணப்பங்கள்

அதன்படி, திருப்பூர் மாநகராட்சியில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அதன் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 400 சதுர அடிக்கு மிகாமல் புதிதாக கான்கிரீட் தளம் போட்ட வீடு கட்டிக் கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தலா ரூ. 2.10 லட்சம் வீதம் அவர்களது வங்கி கணக்கில் மூலம் வரவு வைக்கும் வகையில் மொத்தம் ரூ.33.60 லட்சம் அதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

400 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் இந்த வீட்டில் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, கழிவறை, குளியலறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

இவர்களுக்கு வழங்கப் படும் அரசு மானியமான ரூ.2.10 லட்சம் நான்கு கட்டங்களாக வங்கியில் வரவு வைக்கப்படும். அதன்படி, கட்டிட அடித்தளம் அமைத்த பின் ரூ. 50,000, கட்டிட லிண்டல் அமைக்கப்பட்ட பின் ரூ. 50,000, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட பின் ரூ. 50,000 மேலும், வீட்டின் முழு பணிகளும் முடிவடைந்த பின்னர் ரூ.60,000 வழங்கப்படும்.

எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள் முறையாக 12 மாதங்க ளுக் குள் கட்டிட வே¬ லகளை முடித்து சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் என்றார் மேயர் ந.தினேஷ்குமார்.

படிக்க வேண்டும்

spot_img