தர்மபுரி மாவட்டம் பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந் துள்ள பாளையம் சுங்க சாவடி அருகே மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுநர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுனர்களுக்கு என பாதுகாப்பான பார்க்கிங் வசதி மற்றும் அத்தியாவசியமான அடிப் படை வசதிகள் தேவை மேலும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் ஆர்டிஓ கலால் ஆகியோரால் ஏற்படும் தொடர் தொந்தரவுகள் அவற்றை ஒழுங்குபடுத்தி சீர் செய்ய வேண்டும்.
காப்பீட்டுத் தொகை
ஆன்லைன் வழக்குகள் என்ற பெயரில் ஓட்டுநர்களை தொந் தரவு செய்யும் முறைகளை சீர்படுத்த வேண்டும். மேலும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் ஓட்டுனர்களுக்கு வாகனத்திற்கு செலுத்தும் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையில் இருந்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முறையாக வழங்குவதில்லை
இவற்றை உயிரிழந்து நிற்கதியாக நிற்கும் ஓட்டுநர்களின் குடும் பங்களுக்கு முறையாக வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் வேலு, மாவட்ட செயலாளர் ஆனந்தன், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய அளவிலான ஓட்டுனர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



