உழைப்பாளர்கள் தினமான மே தினத்தை ஒட்டி, கோவை காந்திபுரத் தில், கோவை மாநகர் மாவட்ட திமுக விவசாய தொழி லாளர் அணி சார்பில் கொடியேற்று விழா நடை பெற்றது.
பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமை தாங்க, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பூரண சந்திரன் முன்னிலையில், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் வரவேற்புரை ஆற்ற, கோவை மாநகர் மாவட்ட திமுக செய லாளர் நா.கார்த்திக் (முன் னாள் எம்எல்ஏ) எல்பிஎப் கொடியேற்றி வைத்து 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை அசைவ உணவு வழங்கினார்.
இந்த விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர்
பாலசுப்பிரமணியம், மாநில தொழி லாளர் அணி துணைச்செயலாளர் எல்பிஎப் தமிழ்ச்செல்வன், வட்ட க்கழக செயலாளர்கள் போஸ், இராமநாதன், ஆர்எஸ்.புரம் பூபாலன், பிரின்ஸ், சிங்கை சௌந்தர், சத்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



