Homeபிற செய்திகள்என்.எல்.சி. சார்பில் தூய்மை பிரசார பணிகள்

என்.எல்.சி. சார்பில் தூய்மை பிரசார பணிகள்

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் சார்பில் நெய்வேலி நகரப்பகுதிகள் மற்றும் அதன் அனைத்து திட்டப்பகுதிகள்,சென்னை மண்டல அலுவ லகம் உள்ளிட்ட பிரிவுகளில் தூய்மை இயக்க பிரசார பணிகள் நடந்தது.
என்.எல்.சி. சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப் பள்ளி தலைமை தாங்கி, தூய்மை பணியை துவக்கி வைத்தார்.

பின்,அவர்பேசுகையில், ‘சுத்தமும்,சுகாதாரமும் தெய்வத்தன் மைக்கு ஒப்பானது. தூய்மையான சூழலை பராமரிப்பது ஆன்மிகத் தூய்மைக்கு நிகரானது.என்.எல்.சி. நிறுவனம் தனது அலகுகள், அலுவலகங்கள் மற்றும் நகரப்பகுதிகளில் தூய்மை இயக்கத்தை ஆர்வத்துடன் மேற்கொண்டு, முன்னுதாரணமாக திகழ்கிறது’ என்றார்.


சுரங்கத்துறை இயக்குனர் சுரேஷ் சந்திரசுமன், மனிதவளத்துறை இயக்குனர் சமீர்ஸ்வரூப், மின்சக்தித் துறை இயக்குனர் வெங்கடாசலம், ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், அனைத்து பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


நெய்வேலி நகரம், மெயின் பஜார், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள்,பொது இடங்கள் ஆகியவற்றில் தூய்மைப் பணிகள், விழிப்புணர்வு பேரணிகள், பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரக்கன்று நடுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img