fbpx
Homeபிற செய்திகள்காரிமங்கலம் ஒன்றியத்தில் உணவகங்கள், தாபாக்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

காரிமங்கலம் ஒன்றியத்தில் உணவகங்கள், தாபாக்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ், மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள், நெடுஞ்சாலை உணவகங் கள், சிற்றுண்டி, துரித உணவு கடைகள் மற்றும் தாபாக்களில் உணவு, இறைச்சிகள் தரம் மற்றும் உணவு, அரைத்த மசாலா, இட்லி தோசை மாவு உள்ளிட்டவை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் கண்டெய்னரிலோ, பெயிண்ட், கிரீஸ், ரசாயனம் உபயோகப்படுத்திய பிறகு கிடைக்கும் பிளாஸ்டிக் வாளி மற்றும் பக்கெட்டுகள், டிரேக்களில் உணவு சார்ந்த பொருட்கள், சமையலுக்கு பயன்படும் அரைத்த மசாலாக்கள் வைக்கப்படுகின்றனவா என கண்காணித்து அப்படி வைத்தால் அது தவறு என விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில், தர்மபுரி மாவட்ட உணவு பாது காப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத் துவர் ஏ.பானு சுஜாதா, மேற்பார்வையில் கடந்த இரு தினங்களாக தர் மபுரி நகராட்சி மற்றும் காரிமங்கலம் பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது.

காரிமங்கலம் ஒன் றியத்திற்கு உட்பட்ட தர்மபுரி கிருஷ்ணகிரி ஹைவே, மாட்லா ம்பட்டி, பெரியாம்பட்டி, கரகோடள்ளி, தும்பல அள்ளி, மொரப்பூர் ரோடு, அகரம் பிரிவு நான்கு ரோடு, ஈபி ஆபீஸ செல்லும் சாலையில் உள்ள உணவகங்கள் , தாபாக்களில் சுற்றுப்புற சுகாதாரம், பணியாளர்கள் தன் சுத்தம் மற்றும் உணவுப் பொருள்கள் தரம், இறைச்சிகள் தரம், அச்சிடப்பட்ட செய்தித் தாள் பேப்பர்களில் எண்ணெய் பலகாரங்கள் விநியோகிப்பதோ, பார் சல் தவிர்க்கவும், தடை செய்யப்பட்ட நெகிழிகள், சில்வர், பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பரிமாறுதல், பார்சல் இடுதல் மேலும் அரைத்த மசாலா பொருட்கள், தோசை இட்லிக்கு பயன்படுத்தும் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் மற்றும் பக்கெட்டுகள் இருந்தால் அதை உடன டியாக அகற்றி சில்வர் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் மற்றும் கொள்கலனில் மாற்றம் செய்திட விழிப்புணர்வு செய்யப்பட்டது.

ஆய்வில் பெரியாம் பட்டியில் ஒரு துரித உணவு கடையில் உணவு பிளாஸ்டிக் பேப்பரில் நுகர்வோருக்கு பரிமாறப்பட்டது கண்டு பறிமுதல் செய்து மேற்படி கடை உரிமையாளருக்கு நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உடனடியாக ரூ.1000 அபராதம் விதிக் கப்பட்டது.

இதேபோல் காரிமங்கலம் புறவழிச் சாலையில் ஒரு தாபா மற்றும் பாலக்கோடு செல்லும் சாலையில் ரம்யா தியேட்டர் அருகில் ஒரு உணவகம் என இரண்டு இடங்களில் இதே போல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பரிமாறியது கண்டு எச்சரித்து இனி வாழை இலை மற்றும் மந்தார இலை, பாக்கு மட்டைகளில் மட்டுமே உணவு பரிமாறுதல் மற்றும் பார்சல் இடவேண்டும் என எச்சரித்து தலா ரூ.1000 உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு உணவகத்தில் பிளாஸ்டிக் பக்கெட்டில் அரைத்த இட்லி தோசை மாவு பிரிட்ஜில் வைக்கப்பட் டிருந்தது. அதை உடனடியாக அலுமினிய பாத்திரங்களில் மாற்ற ப்பட்டது. பிளாஸ்டிக் தீங்கு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

ஒரு முறை பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள வழிவகை குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

அனைத்து தாபாக்கள், உணவகங்களுக்கும், துரித உணவகங்களுக்கு விழிப்புணர்வு பிரசு ரங்களும் வழங்கப்பட்டது. ஆய்வில் ஒரு சில தேநீர் கடைகளில் தேயிலை தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img