சிவகாசி, ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 7 வது மற்றும் 8 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார்.
கல்லூரியின் தலைவர் பி.பஞ்சுராஜன், செயலாளர் ப.கார்வண்ணன், தாளாளர் ப.கணேசன், துணை செயலாளர் கா.விக்னேஷ் குமார் மற்றும் அறக்கட் டளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கணினி அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் ஹேமலதா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் எம்.சேகர் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்து பட்டமளிப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் சென்ற கல்வியாண்டில் ஆராய்ச்சிப்படிப்பை முடித்து பட்டம் பெற்ற பேராசிரியர்கள் என அனைவரும் இந்நிக ழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வாழ்த்து¬ ரயில், இன்று பொறி யியல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் ஒரு போட்டித் தேர்வில் வெற்றி பெற 1000 மணி நேரம் உழைக்க வேண்டும். ஒரு துறையில் நிபுணத்துவம் அடைய 10,000 மணிநேரம் உழைக்க வேண்டும். வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு உடையவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என்றார்.
மேலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நான்கு திருக்குறள்கள் மற்றும் பழந்தமிழ்ப் பாடல் மூலம் விளக்கினார். பொருளாதார தன்னிறைவு, வேலையில் திருப்தி மற்றும் விருப்பத்துடன் சமூகத்திற்குப் பயன் தரும்படி பணி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இது பட்டமளிப்பு விழா மட்டுமன்று படித்ததைச் செயல்படுத்துவதற்கான ஆரம்ப விழா என்று கூறி பெற்றோர்கள் மற்றும் சமூகம் பெருமையுடன் நினைக்கும் அளவிற்கு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வாழ்த்து கூறினார்.
ஏஏஏ கல்லூரியின் சிவில் துறையில் பயின்ற முன்னாள் மாணவி மாரீஸ்வரி தற்போது விருதுநகர் மாவட்ட ஊரக துறையின் கீழ் வரைவு அதிகாரியாக பணியாற் றிக்கொண்டு வருகிறார்.
மேலும் சமீபத்தில் அதே துறையை சார்ந்த மற்றுமொரு மாணவர் மாரீஸ்வரன், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளர் பணி நியமனம் பெற்றிருக்கிறார்.
இந்நிகழ்வின் ஒரு அங்கமாக கல்லூரி நாளிதழை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முனைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.



