சேலம் மாவட்டம் மகு டஞ்சாவடி மற்றும் கொங் கணாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மகுடஞ்சாவடி ஒன்றியத்தின் ஏகாபுரம் ஊராட்சியில் பசுந்தாள் உரத்திற்காக சணப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் களை ஆய்வு செய்த அவர், விவசாயிக ளுக்கு பசுந்தாள் உரவிதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நிலக்கடலை விதைப்பு இயந்திரத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏரி தூர்வாரும் பணி, நபார்டு திட்டத் தில் ரூ.82.50 லட்சம் மதிப்பில் தைலாம்பட்டி-ஏகாபுரம் சாலை மேம்பாட்டுப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்து, கட்டுமானப் பொருட் களின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையம், ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம், ரூ.3.50 லட்சத்தில் அமைக் கப்பட்ட புதிய நாற்றங்கால் மையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

கொங்கணாபுரத்தில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள், கொப்பரை தேங்காய் வரத்து மற்றும் விலை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கு கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

வடுகபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.34.75 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு கூடுதல் வகுப்பறைகள், புதுக்காடு பகுதியில் உள்ள தனியார் உரக்கடையில் உர இருப்பு மற்றும் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறை ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
சங்ககிரி வட்டம் வைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தில் விவசாயிகளுக்கு வழங்கப் பட்ட பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட விவரங்களையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது துணை ஆட்சியர் (பயிற்சி) அபிராமி, வேளாண்மை உதவி இயக்குநர் செ.மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.வி.சத்யேந்திரன், செந்தில்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.



