பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மதுரை ஆனையூர் ரோடு கிளை, உச்சபரம்பு மேடு அருகில், காலாங்கரை சாலை, வைகை கார்டன் தெரு, விகேஏவி காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே மதுரை மண்டல உதவி பணியாளர் அதிகாரி டாக்டர் எஸ்.ஜேசுராஜன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இதில் வங்கியின் கோவை துணை மண்டல மேலாளர் ராஜூ, மண்டல அலுவலக முதுநிலை மேலாளர் விக்னேஷ் மற்றும் கிளை மேலாளர் ஏ.அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



