fbpx
Homeபிற செய்திகள்துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர்...

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் கீதாஜீவன் அணிவித்தார்

தமிழக துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச் சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தங்க மோதிரங்கள் அணிவித்தார்.

அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார், உறை விட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெபமணி மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநக ராட்சி மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, பவானி,நாகேஸ்வரி, வைதேகி, ஜெயலட்சுமி, வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, செந்தில் குமார், மாவட்ட தொண்ட ரணி அமைப்பாளர் டி கே எஸ் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங் கிணைப்பாளர் அருணா தேவி, மாவட்ட மா ணவரணி துணை அமைப் பாளர் கோகுல், மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வினோத், துணை அமைப்பாளர் மகேஸ்வரன், மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர் சத்யா உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல கயத் தாறு பேரூராட்சி அலுவ லகம் முன் கிழக்கு ஓன் றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வயது பிறந்த நாள்விழா பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப் பாளர் இராஜதுரை, வடக்கு மாவட்ட வர்த் தக அணி துணை அமைப்பாளர் பேட்டை மாரி யப்பன், பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்பு லட்சுமி இராஜதுரை அவர்கள், மாவட்ட சிறு பான்மை பிரிவு துணை அமைப்பாளர் வழக் கறிஞர் பீர் முகையதீன், கயத்தாறு பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நயினார்பாண்டியன் கொம்பையா பாண்டியன், ஆதி லட்சுமி அந்தோணி, தேவி கண்ணன், செல் வகுமார், கோகிலா, முன் னாள் கவுன்சிலர்கள் சேக்தாவூது, சந்தானம், மாவட்ட பிரதிநிதி சாகுல் ஹமீது, மகளிர் அணி செல்வி, பவுன் ராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த் திக், இளைஞர் அணி சங்கர், மாவட்ட அயலக அணி இஸ்மாயில் மற் றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img