அண்ணாமலைப் பல் கலைக்கழக அம்பேத்கர் இருக்கையின் சார்பாக இந்திய அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர் சவுந்திரராஜன் வரவேற்புரையாற்றினார். விழாவின் சிறப்பு விருந்தினராக நீதியரசர் சந்துரு அரசியலமைப்பு முகவுரையை வாசிக்க அனைவரும் உறுதி மொழியேற்றனர்.
விழாவில் அண்ணா மலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங் கிணைப்புக்குழு உறுப்பினர் அருட்செல்வி தலைமை தாங்கி உரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பொறியியல் புல முதன்மையர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக நீதியரசர் சந்துரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் அரசிய லமைப்பு முகவுரையின் முக்கியத்துவம் குறித்தும் அரசியலமைப்பு புத்த கத்தை வாசித்து பின்பற்ற வேண்டும் என்றும் அறி வுறுத்தினார்.
நடைபெற்ற கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காட்டு மன்னார்கோவில் எம் .எல்.ஏ. சிந்தனைச்செல்வன் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.மற்றும் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக புலமுதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசியர்கள், ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள். மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் மாணவர்கள். ஆசிரியரல்லா பணியாளர் கள் அனைவரும் கலந்து கொண்டனர்.