fbpx
Homeபிற செய்திகள்ரயில்வே அமைச்சருடன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சந்திப்பு கோரிக்கை மனு அளித்தார்

ரயில்வே அமைச்சருடன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சந்திப்பு கோரிக்கை மனு அளித்தார்

டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்.பி நேரில் சந்தித்து நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார். முன்னதாக தூரந்தோ ரயில் நாமக்கல்லில் நிற்க உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார், மேலும் ரயில்வே சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் கலந்துரையாடினார்.

சேலம் – எக்மோர் இடையே இயக்கப்படும் ரயிலை நாமக்கல், மோக னூர் வழியாக கரூர் வரை நீட்டிப்பு செய்யவும், பாலக்காடு – ஈரோடு இடையே இயக்கப்படும் ரயிலை கரூர், மோகனூர், நாமக்கல் வழியாக சேலம் வரை நீட்டிக்க வேண்டும், சென்னை சென்ட்ரல் – கோவை இடையே இயக்கப்படும் ரயிலை சங்ககிரியில் நின்று செல்வ தற்கும், நூற்றாண்டு விழா கொண்டாடும் சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கும் கோரிக்கை அடங்கிய கடி தத்தை அளித்தார்.

1924 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் சங்ககிரி ரயில் நிலையத்தில் இறங்கி திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img