fbpx
Homeபிற செய்திகள்மின்சார வாகன உற்பத்திக்கு தமிழ்நாட்டில் டாவோ நிறுவனம் ரூ.100 கோடி முதலீடு

மின்சார வாகன உற்பத்திக்கு தமிழ்நாட்டில் டாவோ நிறுவனம் ரூ.100 கோடி முதலீடு

மேக் இன் இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு ஸ்மார்ட் மின் இயக்க இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான, டாவோவின் புதிய மின் இயக்க இருசக்கர வாகன அறிமுக நிகழ்வு சென்னையில் நடந்தது.

டாவோ ஈவி டெக்கின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான மைக்கேல் லியு கூறியதாவது: எந்தவொரு மின் இயக்க இரு சக்கர வாகன உற்பத்தியாளருக்கும் தமிழ்நாடு சந்தை மிகவும் முக்கியமானது. இதற்கு மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன.

முதலாவதாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 73% அதிக இருசக்கர வாகன ஊடுருவல் விகிதம் உள்ளது. இது மும்பை மற்றும் பெங்களூரு போன்ற மற்ற முக்கிய நகரங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும். மின்சார வாகனங்கள் துறை என்பது வளர்ந்து வரும் வணிகமாகும்.

இது தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக்கொள்ளும் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது. தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் எண்ணிக்கை உள்ளதால், இம்மாநிலம் இயற்கையாகவே மின்சார வாகனங்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது.

பகுப்பாய்வு

சிறந்த கலாச்சாரம் மற்றும் அதன் குடிமக்களின் தர்க்கரீதியான பகுப்பாய்வு காரணமாக டாவோ போன்று எந்த ஒரு தரமான தயாரிப்பு வழங்குநரும் இம்மாநில சந்தையில் நுழைய ஊக்கு விக்கப்படுகிறார்கள்.

இந்த 2023ம் ஆண்டு நாங்கள் சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். அதில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை புதிய தயாரிப்புகளின் வளர்ச்சிக்காக ஒதுக்க திட்டமிட்டுளோம்.

இந்த 100 மில்லியன் டாலர் முதலீட்டில் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ரூ. 100 கோடியை ஒதுக்க திட்டமிட்டுளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் மதுரை, பொள்ளாச்சி, கோவை மற்றும் தஞ்சாவூரில் நான்கு டீலர்களை டாவோ ஈவி டெக் நிறுவனம் கொண்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் டாவோ 20 புதிய டீலர்களை தமிழ்நாட்டில் நியமிக்கவுள்ளது.

எங்களது முதன்மை தயாரிப்பான டாவோ 703க்கு கூடுதலாக, நாங்கள் சோர் 405 ஐ வழங்குகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img