மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம்னையில் ரூ.32.5 கோடியில் இதய மற்றும் புற்று நோய் சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் புதிய மருத்துவர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் மற்றும் புதிய மருத்துவர்கள் அறிமுக கூட்டம் நடை பெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வரும் சிறப்பு அதிகாரியுமான திருப்பதி தலைமை தாங்கி மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.
கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஷ், டாக்டர்கள் அசோக் பாஸ்கர், பாரி,துணை முதல்வர் டாக்டர் சசிகலா, பல் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சுமா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு மருத்துவக்கல்லூரிகளின் மருத்துவமனைகளில் இருந்து புதியதாக பணியில் சேர்ந்துள்ள மருத்துவ பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர் .முடிவில் மருத் துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஷ் நன்றி கூறினார்.
பின்னர் மருத்துவக் கல்லூரி சிறப்பு அதிகாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை தரம் உயர்த்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான செயல்
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது 194 புதிய மருத்துவப் பேராசிரியர்கள், உதவிபேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரூ.12 கோடியில் விரிவான அவசரகால மகப்பேறு குழந்தை பராமரிப்பு மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1கோடியில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
மேலும் ரூபாய் 12 கோடியில் விரிவான அவசரகால மகப்பேறு குழந்தை பராமரிப்பு மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. ரூபாய் 18 கோடியில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது.
இதுதவிர ரூ.7 கோடியே 60 லட்சத்தில் இதய சிகிச்சை பிரிவு (கேத்லேப்), புற்று நோய் சிகிச்சைக்காக ரூ.25 கோடியில் கதிரியக்க வீச்சு சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதய சிகிச்சை அளிப்பதற்காக 2 இதயவியல் சிகிச்சை நிபுணர்களும், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 சிறப்பு மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைக்கழகம் மூலம் அரசு நிர்ணயித்த சலுகை கட்டணத்தில் சி.டி.ஸ்கேன், எம். ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



