fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலை. பேராசிரியருக்கு இங்கிலாந்து நாட்டின் சர்வதேச காப்புரிமை

அண்ணாமலை பல்கலை. பேராசிரியருக்கு இங்கிலாந்து நாட்டின் சர்வதேச காப்புரிமை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கடல் அறிவியல் புலம்,கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பி.தெய்வசிகாமணிக்கு இங்கிலாந்து நாட்டின்
சர்வதேச காப்புரிமை கிடைத்துள்ளது.

இவர், பல்கலைக்கழக மானியக் குழுவில் ஆராய்ச்சி விருது மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தில் இளம் விஞ்ஞானி விருது பெற்றவர்.
இவரது நிபுணத்துவத் துறையான மீன் நோய்த்தடுப்பு மற்றும் சுகாதார மேலாண்மையில் கணிசமான பங்களிப் பைச் செய்துள்ளார்.

அவரது புரட்சிகர ஆராய்ச்சிப் பணிக்கு இங்கிலாந்து சர்வதேச காப் புரிமை அலுவலகத்தால் “மீன்களின் புதுமையான நோய் கண்டறிதல் கருவி”க் கான காப்புரிமையை ஆக. 21-ம் தேதி பெற்றுள்ளார்.

ஏற்கனவே “மீன் இனப்பெருக்கம் மற்றும் என்-அசிடைல் ப்யூட்டில் கலவை களில்”தனது சிறந்த ஆராய்ச்சிக்காக 2 காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.
நோய் எதிர்ப்பு ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் தேசிய காப்புரிமையும் பெற்றுள்ளார்.

20 ஆண்டுகளாக கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிக்காக இவர் தன்னை அர்ப்பணித்துள்ளார். 88-க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளை புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது,கடல் சூழலில் உள்ள பாசிகளில் காணப்படும் இம்யூனோஸ்டி முலேட்டரி சேர்மங்களின் திறனை ஆராய்ந்து வருகிறார். சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, ஆசிரியர் தின விழாவில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவருக்கு சிறந்த ஆசிரியர் விருதை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் (பொ) ஆர்.சிங் காரவேல், பதிவாளர் (பொ) ஆகியோர் வழங்கினர்.

பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகளுக்கும் மற்றும் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய புல முதல்வர், இயக்குநர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளருக்கு நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img