fbpx
Homeபிற செய்திகள்மத்திய சிறையில் துவக்கம் ‘கைதிகளுக்கு அடிப்படை கல்வி கிடைக்கும்’

மத்திய சிறையில் துவக்கம் ‘கைதிகளுக்கு அடிப்படை கல்வி கிடைக்கும்’

கோவை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் இணைந்து சிறப்பு எழுத்தறிவு திட்ட வகுப்பு துவக்க விழா மற்றும் போதை மறு வாழ்வு மையம் துவக்க விழா நடந்தது.

கோவை மத்திய சிறையில் உள்ள 128 கைதிகளுக்கு அடிப்படை கல்வி வழங்க இச்சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் துவங்கியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைக ளில் உள்ள முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத சிறைவாசிகளை கண்ட றிந்து கல்வி கற்பிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறைத் தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின் படி, கோவை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் இத்திட்டத் தினை செயல்படுத்தும் பொருட்டு, முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத சிறைவாசிகளை கண் டறிந்து அவர்களுக்கு உரிய பாடப்புத்தகம், எழுதுப் பொருட்கள் வழங்கி இத்திட்டத்தை கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி.சண்முகசு ந்தரம் தொடங்கி வைத்தார்.

சிறைக் கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா தலைமை தாங்கினார்.மாவட்ட கல்வி அலுவலர் பெல்ராஜ், சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுமிபிரபா, பிரிஸ்வில்லா, உதவித் திட்ட அலுவலர் இளமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடை பெற்ற மற்றொரு விழாவில், போதை பழக்கத்திற்கு அடிமையான சிறைவா சிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நல்வழிப் படுத்திட ஏதுவாக ‘சீர்த்தி ருத்த சிறகுகள்’ என்ற திட்டத்தில் கோவை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ‘போதை மறுவாழ்வு மையம்’ தொடங்கி வைக் கப்பட்டது. இந்நிகழ்வில் ஆபாஷ் போதை மறுவாழ்வு மைய மருத்துவர்கள் சரண், கருப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img