fbpx
Homeபிற செய்திகள்ரேலா மருத்துவமனையில் பெண்ணுக்கு இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக 8 மணி நேரத்தில் செய்த...

ரேலா மருத்துவமனையில் பெண்ணுக்கு இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக 8 மணி நேரத்தில் செய்த மருத்துவர்கள்

நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு (ILD) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த 42 வயது பெண்ணுக்கு உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர் சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவர்கள்.

குஜராத்தைச் சேர்ந்தவர் திம்பால் ஷா (வயது 42). நார்த்திசு நுரையீரல் நோய் இவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ILDஎன்பது, நுரையீரலில் உள்ள மிகச்சிறிய காற்றுப்பைகளை பாதித்து, சுவாசிப்பதை அடிக்கடி கடும் சிரமமானதாக மாற்றக் கூடியதாகும். புறாக்களின் கழிவுகள், எச்சங்களினால் ஏற்ப டுகிற புறா வளர்ப்பவர்களின் நுரையீரல் நோய் அல்லது மிகை உணர்திறன் மூச்சுப்பை அழற்சி எனவும் இந்நோய் சில நேரங்களில் அழைக்கப்படுகிறது.

நுரையீரல் செயலிழப்பு என்ற அச்சுறுத்தும் ஆபத்தை உணர்ந்த ஷா குடும்பத்தினர், ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தனர். மதிப்பாய்விற்குப் பிறகு இப் பெண்ணுக்கு இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்ய ரேலா மருத்துவர்கள் குழு முடிவு செய்தது.

மூளைச் சாவடைந்ததாக அறிவிக்கப்பட்ட 19 வயதான பெண்ணின் ஆரோக்கியமான ஒரு ஜோடி நுரையீரல்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இந்த உறுப்புதானமே ஷாவுக்கு வாழ்க்கையில் புதிய அத்தியா யத்தை தொடங்க உதவியது.

ஒரு வருட காலமாக உறுப்பு தானத்திற்காக காத்திருந்த சோதனையான காலத்தில் பல கடுமையான நோய் விளைவு களை ஷா எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. ரேலா மருத்துவமனை சேர்மன் மற்றும் நிர்வாக இயக் குநர் பேராசிரியர் முகமது ரேலா கூறியதாவது: திம்பால் ஷாக்கு செய்யப்பட்டிருக்கும் வெற்றிகரமான இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை, நோயாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகிய இருதரப்பினரின் தளராத மனஉறுதிக்கும், மருத்துவர்களின் நிபுணத்துவத்திற்கும் சாட்சியமாக இருக்கிறது.

கடுமையான சோதனையும், சோகமும் எதிர்கொள்கின்ற போதிலும் உறுப்புதானம் என்ற தன்னலமற்ற தியாகம், இருள் சூழ்ந்த சூழ்நிலைகளிலும் கூட நம்பிக்கை தீபத்தை ஏற்றி வாழ்க்கைக்கு புத்துயிரை வழங்கியிருக்கிறது.

தூய்மையான சுற்றுச்சூழலை பராமரிப்பது முக்கியம். பல ஆண்டுகளாக பறவைகளின் கழி வுகள், எச்சங்கள், தூசி மற்றும் சிறகுகளுக்கு வெளிப்படும் நபர் களுக்கு சரிசெய்ய இயலாத நுரையீரல் சேதம், மிகை உணர் திறன் மூச்சுப்பை அழற்சி மற்றும் நாட்பட்ட சுவாசப்பாதை செயலி ழப்பு ஆகியவை ஏற்படக்கூடும் என்றார்.

ரேலா மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் கிளினிக்கல் லீட் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் ஆர். மோகன் கூறுகையில், வழக்கமான மருந்துகளும், சிகிச்சை முறைகளும் இனிமேலும் பயனளிக்காத கடும் பாதிப்பு நிலையை ஷா – ன் உடல்நிலை எட்டியிருந்தது.

உடலிலிருந்து கரியமில வாயுவை அகற்றுவதில் அப்பெண்ணின் நுரையீரல்கள் கடும் சிரமப் பட்டதன் காரணமாக, உறுப்பு மாற்று சிகிச்சையை இவருக்கு உடனடியாக செய்வது அவசியமாக இருந்தது என்றார்.

இந்த அறுவைசிகிச்சையை செய்து முடிப்பதற்கு 8 மணி நேரம் ஆகியது. 14 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
அறுவை சிகிச்சையின்போது ஷா – ன் இரு நுரையீரல்களும் அகற்றப்பட்டு, தானமளித்தவரின் நுரையீரல்கள் பொருத்தப்பட்டன என்றார் இதய உறுப்புமாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம் ஆனந்த் ஜான்.

உணர்விழப்பு மருந்து தீவிர சிகிச்சை பராமரிப்பை நிர்வகித்த டாக்டர் சரண்யா குமார் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img