fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பொறியியல் கல்லூரியில் சிஎஸ்ஐஆர் பொது இயக்குனர் உரை

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிஎஸ்ஐஆர் பொது இயக்குனர் உரை

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் சிஎஸ்ஐஆர் பொது இயக்குநரும், டிஎஸ்ஐஆர் செயலாளருமான முனைவர் என்.கலைசெல்வி சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் சிஎஸ்ஐஆர் தனது 37 ஆய்வகங்கள் மூலம் கடந்த 82 ஆண்டுகாலம் அளித்த பங்களிப்பை விவரித்தார்.

இந்த பங்களிப்புகள் மரபியல், கட்டுமானம், பெட்ரோலியம், உணவு பதப்படுத்துதல், சுரங்கம் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறை களில் பரவியுள்ளது.

சிஎஸ்ஐஆர் திட்டங்களில் ஹெச்ஏபிஎஸ் , ஸ்லாக் சாலைகள், ரெஜுபவ் தொழில்நுட்பம், நிலையான விமான எரிபொருள் ஆகியவை சர்வேதச தரத்துடன் செய்யப்பட்டவைகள் ஆகும், என்றார்.
கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் முனைவர்.வி.பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img