வேல்யூ ஒன் என்பது ஒரு கோல்டு ரிவார்டு ஸ்டோர். ஆன்லைன் மூலமாக நாம் செலவழிக்கும் தொகையில், குறிப்பிட்ட சதவீதத்தை, தங்கமாக தரும் நிறுவனம் ஆகும்.
கோவை, பி.எஸ்.ஜி. கல்லூரி ஐ.எம். ஜேட் வளாகத்தில், வேல்யூ ஒன் நிறுவனத்தின் திட் டங்களை விளக்கும், பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில், வேல்யூ ஒன் நிறுவனர் அருண்பிரகாஷ் கூறியதாவது: வேல்யூ ஒன் நிறுவனத்தின் நோக்கம், வாடிக் கையாளர்கள் செலவழிக்கும் பணத்தில், குறிப்பிட்ட தொகையை, தங்கமாக மாற்றி வரவு வைப்பதோடு, இணை பங்குதாரராகவும் மாற்றுவதாகவும்.
இதில், பிரத்யேக கோல்டு ஸ்டோர் உள்ளது. இதில், ஆன்லைன் மூலம், ‘வேலட் கோல்டாக’ வாங் குதல், விற்றல், பிறருக்கு பரிசளிக்க முடியும். இதை நீங்கள், இதே இணை யதளத்தில் விற்று, பணமாக பெறலாம். மேலும், எங்கள் இணையதளத்தில், 400க்கும் மேற்பட்ட பிராண்டுகளின், ஆன்லைன் ஸ்டோரில், பர்சேஸ் செய்யலாம். நீங்கள் பொருள் வாங்கும் தொகை, அப்படியே வேல்யூ பாயின்ட்டாக மாறிவிடும்.
இதில், கூடுதல் சிறப்பாக, ‘ரீசைக்கிள் ஆப்பில்ஸ்’ வசதியும் வழங்கப்படுகிறது. வேறு இணையதளங்களில், ஆன்லைன் மூலம் பர்சேஸ் செய்த ரசீதை, இதில் சமர்பித்து, வேல்யூ பாயின்ட்டாக மாற்றி கொள்ளலாம்.
இச்சலுகைகள் அனைத்தும், கஸ்டமருக்கு கிடைக்க வேண்டுமெனில், லேல்யூ ஒன் இணையதளத்தில், பர்சேஸ் செய்ய துவங்கும் போதே, உங்களுக்கான பிரத்யேக உறுப்பினர் எண் வழங்கப்படும். எனவே, இந்நிறுவனத்தின் ஒரு பங்குதாரராகவும் இணைந்து பயனடையலாம்.