fbpx
Homeபிற செய்திகள்தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் - புத்தாண்டு கொண்டாட்டம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் – புத்தாண்டு கொண்டாட்டம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை மாலை மீனாட்சி மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், பள்ளி நிர்வாகி அருட்தந்தை காஷ்மீர் ராஜ் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர்.புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பிராத்தனைகளும், உறுதிமொழிகளும் ஏற்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் மற்றும் பொது மேலாளர் (பொறுப்பு) செல்வ பாண்டி, மருத்துவமனை ஊழி யர்கள், பொது மக்கள் என 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img