fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா: நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா: நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நகராட்சி முன்பு நடைபெற்றது. இந்த விழாவில் கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா ஏற்பாடுகளை முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் செய்திருந்தார்.

விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவரணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் தொகுதி கழக இணைச்செயலாளர் ஞாயம் ரொமால்ட், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் சகாயராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட முன்னாள் தூத்துக்குடி மீனவரணி செயலாளர் அகஸ்டின்,
முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ் குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் அசன் வரவேற்புரை வழங்கினார்.

இந்த விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் சி த செ ராஜா சிங், முன்னாள் அரசு வழக்கறிஞர் எம் ராஜாராம், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரத்தினம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவ சுப்பிரமணியன்,
வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லர் ராஜா, அருண்குமார், அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதி செல்லப்பா, தூத்துக்குடி கிழக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் அன்டோ, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ்,பெலிக்ஸ், சகாயராஜ், மீனவர் சங்க பிரதிநிதிகள் ஞாயம் ரொமால்ட், ஜேசுராஜ், பாலன், மற்றும் அந்தோனி செல்வராஜ், அய்யப்பன், சேவியர், சுப்புராஜ், ராஜசேகர், வெங்கடாசலம், ஆபிரகாம், முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img