fbpx
Homeபிற செய்திகள்பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவில் ஹாக்கி போட்டி

பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவில் ஹாக்கி போட்டி

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் உடற்கல்வித்துறை இணைந்து மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த முதல் போட்டியில் நாமக்கல் பாவை கல்லூரி அணி 3&-0 கோல் கணக்கில் யுனைடெட் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பி அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி அணியுடன் மோதிய பிபிஜி கல்லூரி அணி 2&-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அனைத்து போட்டிகளும் நாக்கவுட் முறையில் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்க பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img