fbpx
Homeபிற செய்திகள்‘530-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்’ ராஜம்மாள் தேவதாஸ் நினைவுச் சொற்பொழிவில் புகழாரம்

‘530-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்’ ராஜம்மாள் தேவதாஸ் நினைவுச் சொற்பொழிவில் புகழாரம்

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறு வனத்தில் முன்னாள் நிர் வாக அறங்காவலரும் வேந்தருமான முனைவர் ராஜம்மாள் பா.தேவதாஸ் 21-ம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நேற்று (மார்ச் 17) நடந்தது.
புல முதன்மையர் முனைவர் என். வாசுகி வரவேற்றார்.

ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் துணைநிர்வாக அறங்காவலர் மற்றும் மேனாள் பதிவாளர் முனைவர் கௌரி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசும்போது அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தை பல்கலைக்கழகமாய் உயர்த்திய உன்னத பெண்மணி ராஜம்மாள் பா.தேவதாஸ். குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனில் அவருக்கிருந்த அதிக ஈடுபாடு தான் சத் துணவுத்துறையில் பல ஆராய்ச்சிகளைச் செய்து பயனுள்ள உத்திகளையும், கோட்பாடுகளையும் அறிமுகப்படுத்தினார் என்றார்.

சமூகக்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிப்புல முதன்மையர் முனைவர் விஐயலட்சுமி புருசோத் தமன் பேசுகையில்,
நம் அனைவருக்கும் அவர் மிகச்சிறந்த வழி காட்டி. கோவையில் ஒரு மனையியல் கல்லூரியில் முதல்வராகப் பணியைத் தொடங்கி, வேந்தராக உயர்ந்த பெருமைக்குரிய பெண்மணி.. 570 புத்தகங்களையும், 530-க்கும் மேற்பட்ட பன் னாட்டு, தேசிய ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தவர் என்றார்.

துணைவேந்தர் முனைவர் வை.பாரதிஹரி சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.
பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா நன்றி கூறினார்.

வணிகவியல்துறைப் பேராசிரியர் முனைவர் மு.கன்னியம்மாள், உணவு மற்றும் ஊட் டச்சத்துத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஸ்ரீதேவிசிவகாமி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img