fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா

திருப்பூரில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கையொப்பமிட்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ மற்றும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிவசாமி முன்னிலையில் ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ஒன்றிய கழகச் செயலாளரும் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.விஜயகுமார் ஒன்றிய கழகத்திற்கான உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, குணசேகரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்றிய கழக அவைத்தலைவர் ஐஸ்வர்ய மகாராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கார்த்திக், பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img