fbpx
Homeபிற செய்திகள்‘நிதி உள்ளடக்கம் பரவல் முழுமை பிரச்சாரம்’: கோவை யூனியன் பாங்க் ஆப் இந்தியா விழாவில் ஜன்சுரக்ஷா...

‘நிதி உள்ளடக்கம் பரவல் முழுமை பிரச்சாரம்’: கோவை யூனியன் பாங்க் ஆப் இந்தியா விழாவில் ஜன்சுரக்ஷா திட்டத்தில் பயன்பெற 500 பேர் பதிவு

யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கோவை பிராந் திய அலுவலகம் சார்பில் குரும்பபாளையம் ஸ்ரீ விஷ்ணு மஹாலில் “நிதி உள்ளடக்கம் பரவல் முழுமை பிரச்சாரம்“ நிகழ்ச்சி நேற்று (ஆக.5) நடைபெற்றது.

இதில் மண்டல மேலாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் ஜன்சுரக்ஷா உள்ளிட்ட வங்கியின் பல்வேறு கடனுதவி மற்றும் சேவைத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் வங்கியின் கோவை பிராந்திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா, தேசிய நகர வாழ்வாதார திட்ட உதவித் திட்ட அலுவலர் சத்தியவதி, பிராந்திய துணைத் தலைவர்கள் முருகானந்தம், சிவகுமரன் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று பல நன்மைகளை உள்ளடக்கிய ஜன்சுரக்ஷா திட்டத்தின் பயன்களைப் பெறுவதற்காகப் பதிவு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img