fbpx
Homeபிற செய்திகள்கோவையில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவையில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று (27ந் தேதி) கோவை மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கோவை மாநகர தி.மு.க.வழக்கறிஞர் அணி மாநகர் மாவட்ட அமைப்பாளர் அன்புசெழியன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி, கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் அன்புச் செழியன் மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி தலைவர் மருதுபாண்டி துணைத் தலைவர் மணிவேல், அரசு வக்கீல் அருள்மொழி, கழக வழக்கறிஞர்கள் ஜி.டி. ராஜேந்திரன், பாண்டி குமார் உள்பட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img